கொரோனா இன்னும் முழுமையாக குறையாத நிலையில் சென்னை தியாகராயநகரில் ஏராளமான பொருட்கள் வாங்கி மக்கள் கூடியது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு பொதுமக்கள் துணி, பலகாரம் செய்வதற்கான பொருட்கள் வாங்க குவிந்தனர். இந்த வாரம் நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததால் மிகவும் ஏதுவாக போனது.
வார இறுதி நாளான நேற்று தி.நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தீபாவளிக்கு வேண்டிய துணிகளை வாங்கி குவித்தனர். அதனையொட்டி, ரங்கநாதன் தெருவில் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்க அலை மோதினர்.
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் கொரோனா நோய் பரவலை தடுத்திடும் வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதையொட்டி அதிக அளவில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
ஆனாலும் அதை எதையும் பொருட்படுத்தாமல் மக்கள் கொரோனா பயம் இல்லாமல் கூட்டமாக சுற்றித்திரிகின்றனர். இதுபோல் சுற்றித்திரிந்தால் முழு முடக்கத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்பதை மக்கள் மறந்துவிடக்கூடாது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கொரோனா #திநகர் #தீபாவளி