முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் .விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, குவாரி உள்ளிட்ட 29 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் சோதனையை தொடங்கியுள்ளனர்.
முன்னதாக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது. இலுப்பூரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட 29 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள விஜயபாஸ்கரின் உறவினர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் உள்ள விஜயபாஸ்கரின் அண்ணன் உதயகுமாரின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. திருச்சி அன்பு நகரில் உள்ள அவரது நெருங்கிய உறவினர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அரசியல் #அதிமுக #ரெய்டு #விஜயபாஸ்கர் #ADMK #Raid #VijayaBasker