இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகளில் இந்துக்களுக்கு மட்டுமே வேலை என்ற அரசின் அறிவிப்பால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நெட்டிசன்கள் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கூடுதலாக சென்னை, திண்டுக்கல், நாமக்கல், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.
இதற்கான பேராசிரியர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
ஆனால் இந்து சமய அறநிலையத்துறையால் தொடங்கப்படும் இந்த கல்லூரிகளில் இந்துக்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்ற அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அமையும் என்ற கருத்து அனைத்து தரப்பிலும் எழுந்துள்ளது.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து நிலையில் சமூக வலைளதளங்களான ட்விட்டரில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நெட்டிசன்கள், சங்கி என்ற அடைமொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சேர்த்து வைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விரைவில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #முகஸ்டாலின் #