நாகை மாவட்டம் உருவானதை பறைசாற்றும் உற்சாக விழா. முதல்நாள் தொடங்கிய மினி மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் ஆட்சியர். ஆர்வத்துடன் கலந்து கொண்ட கல்லூரி மாணவர்கள்.
படக்காட்சிகள்:மாவட்ட ஆட்சியர், மாரத்தான் சுடரை ஏற்றுவது, கொடி அசைத்து துவக்கி வைப்பது, நாகை 30 வாசகம் முன்பு தன் படம் எடுத்துக் கொள்வது, ஓட்டம்.
நாகப்பட்டினம் மாவட்டம் தொடக்கப்பட்டு இருபத்தி ஒன்பது ஆண்டுகள் நிறைவுற்று 30வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இதனை பறைசாற்றும் வகையில், நாகை 30-ம் ஆண்டில் முதலிடம் நோக்கி என்ற பெயரில் ஐந்து நாட்களுக்கு விமரிசையாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று தொடங்கும் நாகை 30 முதலிடம் நோக்கி கொண்டாட்ட விழா வரும் 22ஆம் தேதி வரை விமரிசையாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று காலை நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. ஓட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் மினி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்று ஆட்சியர் அலுவலகம் வரை ஓடி வந்தனர். முன்னதாக மாரத்தான் ஓட்ட ஜோதியினை ஆட்சியர் அருண் தம்புராஜ் ஏற்றிவைத்தார். தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு நடைபெறும் விழாவில், பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஓவியப்போட்டிகள், கட்டுரைப்போட்டி, பட்டிமன்றம் மற்றும் நலத்திட்ட உதவிகள் நடைபெற உள்ளன.
செய்தியாளர் : ச.ராஜேஷ், நாகை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #நாகைப்பட்டினம் #மாரத்தான் #nagapatnam