திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிக பரப்பளவில் முருங்கை பயிரிட்டுள்ளனர். அரசு வேளாண் விதை விற்பனை நிலையங்களில் வாங்கபட்ட PKM 1 ரக முருங்கை விதைகள் பயிரிடப்பட்டு ஒரு வருடமாகியும் காய் காய்க்கவில்லை.
ஒரு ஏக்கருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வரை செலவிட்டு விவசாயம் செய்தும் எந்த பலனும் கிடைக்காததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் வேளாண் துறை அதிகாரிகளிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை.
ஒரு சில தனியார் விதை விற்பனை நிலையங்கள் தான் போலி விதைகளை விற்பனை செய்வது வழக்கம். ஆனால் அரசு வேளாண் விதை விற்பனை நிலையத்திலும் இது போன்ற வழங்கப்படும் போலி விதைகளால் விவசாயிகள் பாதிக்கபட்டு உள்ளனர்.
ஆகவே நிலத்தை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி உடுமலை கோட்டாட்சியர் கீதாவிடம் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
உரிய நடவடிக்கை எடுக்க தவறினால் விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அரசுவேளாண்நிலையம் #போலிவிதை