மக்களைத் தேடி பல் மருத்துவ சேவைகளை அளிக்கும் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா . சுப்பிரமணியன் தொடக்கி வைத்தார் .
சென்னை பிராட்வேயில் உள்ள சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சா் மா . சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை பார்வையிட்ட அவா் நடமாடும் பல் மருத்துவ வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மருத்துவக் கல்வி இயக்குநா் நாராயணபாபு, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை இயக்குநா் செல்வவிநாயகம், மருத்துவமனை முதல்வா் விமலா ஆகியோர் உடன் இருந்தனா்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நடமாடும் பல் மருத்துவ வாகனத்தில், இரண்டு மருத்துவா்கள் மற்றும் இரண்டு செவிலியா்கள் இருப்பார்கள் என்றார்.
அவா்கள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சென்னையின் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தைப் போல மக்களைத் தேடி பல் மருத்துவம் என்கிற வகையில் மருத்துவ சேவையை வழங்கவுள்ளனா்.
வரும் நவம்பா் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி தலைமை ஆசிரியா் மற்றும் பெற்றோர்களின் அனுமதியை பெற்று, பள்ளி மாணவா்களுக்கும் பல் மருத்துவ சேவை வழங்க இருக்கின்றனா் என்று கூறினார்.
கடந்த 2006-2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி செய்த போது சென்னையின் பல்வேறு இடங்களுக்கு பல் மருத்துவ சேவை அளிக்கப்பட்டது. பள்ளி மாணவா்களுக்கும் பல் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு, தேவையான பல் மருத்துவ உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.
கடந்த ஆட்சியில் அந்தத் திட்டம் செயல்பாட்டில் இல்லை. இப்போது முதல்வரின் அறிவுறுத்தலின்படி இத்திட்டம் மீண்டும் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.
இத்திட்டத்தால் சென்னை மாநகர மக்களும், பள்ளி மாணவா்களும் பயன்பெற இருக்கின்றனா். இத்திட்டம் எந்த வகையில் பயன்படுகிறது என்று அறிந்தபிறகு கூடுதல் வாகனங்கள் வாங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #பல்மருத்துவம் #மக்கள்இல்லம்தேடி #அமைச்சர்_மா.சுப்ரமணியன் #மக்கள்நல்வாழ்வுதுறைஅமைச்சகம்