கடலூரில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மேல்பட்டாம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது பாரூக் (42) என்பவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து விட்டு கடந்த 2019ஆம் ஆண்டு சொந்த ஊர் திரும்பினார். இவருக்கு 15, 18 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். முகமது பாரூக்கின் மனைவி கடந்த ஆண்டு உயிரிழந்தார். எனவே மகள்கள் இருவரையும் முகமது பாரூக் வளர்த்து வந்தார். பாரூக் மீண்டும் வெளியாடு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், பாரூக்கின் 15 வயது மகள் கடலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சிறுமியின் புகாரை கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். அதில், கடந்த ஒரு வருடமாக தனது தந்தை தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மகேஷ்வரி வழக்குப் பதிவு செய்து முகமது பாருக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழ்நாடு #பாலியல்தொல்லை #சிறுமி_வன்கொடுமை #Child_Abuse