தடை செய்யப்பட்ட ஸ்பீட் என்ஜினை பயன்படுத்தி நாகை பைபர் படகு மீனவர்களின் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகளை சேதப்படுத்தி மோதலில் ஈடுபட்ட பூம்புகார் மீனவர்களுக்கு கண்டனம் ; சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு
தடை செய்யப்பட்ட ஸ்பீட் என்ஜினை பயன்படுத்தி மீன்பிடித்து, நாகை, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் மீனவர்களின் 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான வலைகளை சேதப்படுத்தி மோதலில் ஈடுபட்ட பூம்புகார் மீனவர்களுக்கு நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நாகையில் இருந்து 2 கிலோ மீட்டர் கடல் மயில் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்களை நடுக்கடலில் சூழ்ந்து வலைகளை சேதப்படுத்திய பூம்புகார் மீனவர்கள் ரகளையில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் நாகை நாகை மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் தடை செய்யப்பட்ட ஸ்பீட் என்ஜின் பயன்படுத்தும் மீனவர்களை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும்,
மோதலில் ஈடுபட்ட பூம்புகார் மீனவர்களின் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பூம்புகார்_மீனவர்கள் #நாகை_மீனவர்கள் #ஸ்பீட்_என்ஜின்