செய்திகள்
Trending

போக்குவரத்து காவலரை அடித்த அமைச்சர் அனிதா R.ராதாகிருஷ்ணன் உதவியாளர்!!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தமிழக அரசு வழங்கிய TN 43 G 8969 INNOVA காரை அவரது உதவியாளர் கிருபாகரன் இன்று (18.10.21) காலை 9.30 மணியளவில் திருச்செந்தூரில் உள்ள தனியார் லாட்ஜ்க்கு அவரது ஓட்டுநர் மூலம் எடுத்து வந்தார். ஓட்டுநர் அவரை லாட்ஜில் இறக்கி விட்டுவிட்டு காரை லாட்ஜிற்கு வெளியே நடுரோட்டில் நிறுத்தி இருந்தார். போக்குவரத்துக்கு இடையூராக கார் நின்றதால் போக்குவரத்து காவலர் முத்துக்குமார் என்பவர் ஓட்டுநரிடம் காரை ஓரமாக நிறுத்த சொன்னார். 10.35 மணிக்கு பட்டபகலில் லாட்ஜில் இருந்து Tired ஆக வெளியே வந்த அமைச்சரின் உதவியாளர் கிருபாகரன் கார் 30-அடி தூரம் தள்ளி நிற்பதை பார்த்தவுடன் ஓட்டுநரிடம் கேட்டார். டிரைவர் போக்குவரத்து காவலர் முத்துக்குமார் தான் தள்ளி நிறுத்த சொன்னார். உடனே ஆத்திரம் கொண்ட கிருபா காவலர் முத்துக்குமாரிடம் சென்று எங்க ஆட்சி நடக்கும் போது என்னோட காரை எப்படி நீ எப்படி ஓதுக்கி நிறுத்த சொல்வாய் என்று தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் பளார் அடி கொடுத்தார். மன உளச்சல் அடைந்த காவலர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சிறிது நேரத்தில் அமைச்சர் அனிதா R.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் காவலர் முத்துக்குமாரை சந்தித்து அமைச்சர் பேசுவதாக கூறி செல்போனை கொடுத்தார். அமைச்சர் காவலரிடம் கிருபாவை உன்னிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறேன் என்று கூறினார். மன்னிப்பு கேட்டால் அடிபட்ட அவமானம் சரியாகி விடுமா? அந்த இடத்தில் எப்படி வேலை பார்ப்பது Public என்னை மதிப்பார்களா? என்று கூற உன்னிடம் எப்படி பேசவேண்டும் என்று எனக்கு தெரியும் என்று சொல்லி செல்போனை துண்டித்தார்.சிறிது நேரத்தில் காவலர் முத்துக்குமாருக்கு பல்லான,பல்லான இடத்தில் இருந்து போன் வந்தது. வேலை,குடும்பம்,குட்டி என்ற பயத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டார். போலீசாருக்கே இந்த நிலையா.? அப்போ மக்கள் நிலை.???????

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அமைச்சர்_அனிதா_இராதாகிருஷ்ணரன் #போக்குவரத்துகாவலர் #TrafficPolice

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button