பிட்காயின் மோசடி, ஒருவர் அடித்து கொலை, தென்காசியில் பரபரப்பு…
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் முகமது அனீஸ். இவர் மதுரையில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். நிதி நிறுவனத்தில் பிட்காயின் பரிவர்த்தனையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை கோடிக்கணக்கில் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிட்காயின் மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்பொழுது பிணையில் வெளி வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை மதுரையிலிருந்து அவரால் ஏமாற்றப்பட்ட சில மர்ம நபர்கள் அவரை கடத்தியதாக கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட முகமது அனீஸ் தென்காசி அருகே உள்ள ஓரிடத்தில் வைத்து மர்ம நபர்களால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த படுகாயமடைந்துள்ளார் முகமது அனீஸ். எங்கே கொலை குற்றம் ஆகி விடுமோ என பயந்த மர்ம நபர்கள் அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே முகமது அனீஸ் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து முகமது அனைத்தும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு மதுரையிலிருந்து முகமது அணி செய் கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காயின் மோசடியில் ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தென்காசியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பிட்காயின் #BitCoins #Tenkasi #தூத்துக்குடி