சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவான போலீஸ்காரரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை அடுத்துள்ள நல்லாவாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் (32).
இவர், ஐ.ஆர்.பி.என் பிரிவில் காவலராக பணியாற்றி வருகிறார். குமரவேல்-க்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஜெகதீஸ்வரி என்பவருக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. குமரவேல் தினமும் ஜெகதீஸ்வரியின் வீட்டிற்குச் சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜெகதீஸ்வரியின் வீட்டிற்கு குடிபோதையில் வந்த குமரவேல், ஜெகதீஸ்வரியின் 12 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடரவே சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, வெளிநாட்டில் உள்ள தனது தந்தையிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நடந்ததை தெரிவித்துள்ளார்.
இதைகேட்டு பதறிபோன அவர், உடனே வெளிநாட்டில் இருந்து புதுச்சேரி வந்தார். பின்னர் தனது மகளுக்கு நடந்தது குறித்து குழந்தைகள் நல வாரியத்தில் நடந்தவை குறித்து தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து குழந்தைகள் நல வாரியத்தினர் தவளகுப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவலர் குமாரவேல் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் தாயார் ஜெகதீஸ்வரி ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டதின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். சிறுமியின் தாயை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எனினும், தலைமறைவாக உள்ள காவலர் குமரவேலுவை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #புதுச்சேரி #போலீஸ் #Police #ChildAbuse #பாலியல்தொல்லை