கோவில்பட்டி எட்டயபுரத்தில் டிவி மெக்கானிக் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே குமாரகிரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புராஜ் மகன் சூரிய ராகவன் (வயது 31). இவர் எட்டயபுரத்தில் டிவி மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இன்று காலை கடையின் முன் நின்று கொண்டிருந்த அவரை மர்ம நபர் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட சூரிய ராகவனும் சோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் ஆனந்தராஜ் என்பவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்ததாகவும், இந்த விவகாரத்தில் கொலை நடத்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக எட்டையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #crime #கிரைம் #தூத்துக்குடி #Thooththukudi