பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல கிரிக்கெட் வீரர் ரோகித் தாமோதரன் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
இந்நிலையில், ரோகித் தாமோதரன் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா என்பவருக்கும் கிரிக்கெட் வீரர் ரோகித் தாமோதரன் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஷங்கரின் மருமகன் ரோகித் தாமோதரன் உட்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு ரோகித் தாமோதரன் உட்பட 5 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சினிமா #பாலியல்தொல்லை #ஷங்கர் #தமிழ்நாடு #Shankar #ChildAbuse