சினிமா

“தீபாவளியன்று மாநாடு , இல்லையென்றால் முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம்” சிம்புவின் தாய் ஆவேசம்…

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம்” சிம்புவின் தாய் ஆவேசம்… தீபாவளியன்று “தீபாவளியன்று மாநாடு , இல்லையென்றால் முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம்” சிம்புவின் தாய் ஆவேசம்… படம் வெளிவரவில்லையென்றால் முதலமைச்சர் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருப்பேன் என்று சிம்புவின் தாயார் உஷா டி . ராஜேந்தர் தெரிவித்துள்ளார் . வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாவது தொடர்பாக டி . ராஜேந்தர் மற்றும் உஷா டி . ராஜேந்தர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று மனு அளித்தனர் . அதில் , ‘ தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் வெளிவரும் படங்களுக்கு தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர் சங்கம் என்ற பெயரில் சிலர் கட்டபஞ்சாயத்து செய்து வருகின்றனர் என்று குறிப்பிட்டிருந்தனர். சிலம்பரசனை வைத்து அன்பானவன், அசராவதவன், அடங்காதவன் படத்தை தயாரித்த மைக்கேல் ராயப்பனுக்கு எந்த பணமும் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் சிம்பு நடிக்கும் எந்த படத்தையும் வெளி வரவிடாமல் ரெட்கார்டு போட்டு வருகிறார் என தெரிவித்தனர்.
அதற்கு தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தினர் மறைமுகமாக உதவி வருவதாகவும் கூறி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், அருள்பதி மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முரளி உட்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். சிலர் தங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கின்றனர். சிம்புவின் மாநாடு படத்தை தீபாவளியன்று வரவிடாமல் தடுத்தால், நான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டின் முன்பு உண்ணாவிரதம் இருக்க தயாராக இருக்கிறேன் என்று உஷா தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய டி.ராஜேந்தர், இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து நடைபெறுகிறது. இதனால் பல சினிமா கலைஞர்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளப்படுகிறார்கள் என்று கூறினார். #visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சினிமா #மாநாடு #சிம்பு #உஷா_ராஜேந்திரன் #டி.ராஜேந்திரன் #தீபாவளி_படம் #மாநாடு_தீபாவளி #Cinema #Maanaadu #Simbu #TRajendran #UshaRajendren #Deepavali_Release_Maanaadu #Deepavali_Release
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button