செய்திகள்
Trending

“காவலர் வீரவணக்கம்” காவலருக்கான பாடல் வெளியிட்ட வருண் குமார் ஐபிஎஸ்

ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் 21-ம் தேதி ‘காவலர் வீரவணக்க’ நாளாக அனுசரிக்கபப்டுகிறது. நாட்டின் பாதுகாப்பாக அயராது பணியாற்றி உயிர்த்தியாகம் நீத்த காவலர்களுக்கு மரியாதை செய்யும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், 2021-ம் ஆண்டிற்கான ‘காவலர் வீரவணக்க’ நாளையொட்டி, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் ஐபிஎஸ், ‘வீர வணக்கம் பாடல்’ என்ற புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி, தலைமை காவலர் சசிகலா ஆகியோர் பாடிய இந்த பாடல் யூட்யூபில் வெளியாகி உள்ளது. இது குறித்து வருண் குமார் ஐபிஎஸ் பகிர்ந்துள்ள பதிவில், ‘2021 காவலர் வீரவணக்க நாளையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு காவல்துறை நாயகனுக்கும் ‘வீர வணக்கம்’ பாடலை சமர்ப்பிக்கின்றோம்’ என தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் ஆரம்பமானது முதல் இன்று வரையும், இனியும் 24*7 மணி நேர களப்பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்காக இந்த பாடல் டெடிகேட் செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலக்கட்டத்திலும் களப்பணி செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 137 காவல்துறையினர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். ‘மண்ணுக்காய் உயிர்நீத்த எம் உயிர் தோழா’ என்ற வரிகளில் தொடங்கும் காவலர் வீர வணக்கம் பாடல் பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #காவலர்_வீரவணக்கம் #PoliceAnthem #ThiruvallurPolice #திருவள்ளூர்_காவலர்கள் #தமிழ்நாடு #TamilNadu #TamilNaduPolice #ஜிப்ரான் #Ghibran #திருமூர்த்தி #Thirumurthy #வருண்குமார்ஐபிஎஸ் #VarunKumarIPS #TNPolice #HeadConstableSasikala

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button