மனித உரிமைகள், ஒன்றியம், மாநில, கவுன்சில் வார்த்தைகளை தனியார் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
இது குறித்து தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு விடுத்துள்ள சுற்றறிக்கையில், “மனித உரிமைகளை பேண தேசிய அளவில் தேசிய மனித உரிமை ஆணையமும், மாநில அளவில் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையமும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மனித உரிமைகள் (Human Rights) என்ற வார்த்தைகளை சில தனியார் அமைப்புகள் தங்கள் பெயருடன் சேர்த்துக்கொண்டு தங்களை தேசிய மற்றும் மாநில உரிமைகள் ஆணையங்களுடன் தொடர்புடையதாக அடையாளப்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருவதாக புகார்கள் மேலெழுந்துள்ளது.
தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் படி மனித உரிமைகள், ஒன்றியம், மாநில, கவுன்சில் என்ற சொல்லை தனியார் அமைப்புகள் தங்கள் அமைப்பின் பெயருடன் சேர்த்து பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வார்த்தைகளை தனியார் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்
மனித உரிமைகள் என்ற சொல்லாடலை பயன்படுத்தி வந்த அமைப்புகள் அச்சொல்லாடலை தங்களது பெயரிலிருந்து நீக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. எனவே தனியார் அமைப்புகள் தங்கள் பெயரை குறிப்பிடும் போது இது ஒரு தனியார் அமைப்பு என்ற பெயர் இணைப்புடன் செயல்பட வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மனிதஉரிமை #சைலேந்திரபாபு #டிஜிபி #தமிழ்நாடுபோலீஸ் #TamilNaduPolice