தேர்தல் முறைகேடு : மறுதேர்தல் !! தூத்துக்குடி ஆயர் அதிரடி உத்தரவு!!
தூத்துக்குடி நாசரேத் திருமண்டல செயலர் மற்றும் துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு 20.10.2021 அன்று நடந்த தேர்தல் ரத்து – தூத்துக்குடி பேராயர் அதிரடி உத்தரவு
நெல்லை தூத்துக்குடி திருமண்டலத்தின் இறுதி கட்ட தேர்தலான செயலர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் நேற்று நாசரேத் மர்காசியஸ் கல்லூரியில் நடைபெற்றது.
அதில் ஒரு தரப்பினர் சார்பில் சில சமூக விரோதிகள் தேர்தல் நடக்கும் கட்டிடத்தின் உள்ளே கொண்டு செல்லப் பட்டு வாக்கு எண்ணிக்கையின் போது எதிர் தரப்பினரை மிரட்டுதல் மற்றும்; அச்சுறுத்துதல் போன்றவற்றில் ஈடுபட்டு எதிர் தரப்பினருக்கு சாதகமாக பதிவான வாக்குகளை திருடி தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஒரு தரப்பு வெற்றி பெற்றதாக தவறுதலாக அறிவிக்கப் பட்டது.
இது பற்றி சமூக வலைத்தளங்களில் பேராயர் இதில் தலையிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பரவி வந்தது. இது சம்பந்தமான புகாரின் பேரில் பேராயர் வாக்கு பதிவின் போது நடந்த வீடியோவை தருவித்து பரிசீலனை செய்தார். அதில் இந்த தவறுகள் நடந்தது கண்டு பிடிக்கப் பட்டது. எனவே பேராயர் மேற்கண்ட தேர்தலை ரத்து செய்து விட்டு புதிதாக மறுதேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப் படும் என தெரிவித்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #Thooththukudi #தூத்துக்குடி #தேர்தல்முறைகேடு