பட்டாசு தொழிற்சாலை தொய்ந்து வரும் நிலை கண்ணீர்மல்க உரிமையாளர்களும் கூலித் தொழிலாளிகளும் வேதனை.*
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட மறவபட்டி பகுதியில் தனியார் பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. தீபாவளி திருநாள் பற்றி செய்தி சிற்ப்பு பார்வை நிகழ்வின் போது பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் பிரபு அவர்கள் கூறியது. தற்போது ஆயிரம், ஐம்பதாயிரம் சரங்கள் வெடி வெடிக்க கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது . இந்நிலையில் அதிக வியாபாரம் அரசியல் நிகழ்ச்சி, விசேஷங்கள் விழா கோவில் திருவிழா காலங்களில் நிகழ்ச்சிக்கு அதிக விற்பனை சரவெடி உற்பத்தியாகும் .இந்நிலையில் தற்போது இத்தகவல் வெளியானது அடிப்படையில் சரவெதி தயாரிப்பு நிறுத்தப் பட்டுள்ளது என கூறினார் மேலும் கடந்த கொரோனா காலங்களில் பெரும் பட்டாசு தொழில் முடக்கப்பட்டது .இந்நிலையில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் வெளிமாநிலங்கள் ஏற்றுமதியும் குறைந்துள்ளது. போக்குவரத்து தடையினால் இந்நிலையில் தற்போது உள்ள சூழ்நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒவ்வொரு கம்பெனியிலும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர் .அவர்களுக்கு போதிய வருமானம் எங்களால் கொடுக்க முடியவில்லை பட்டாசு தயாரிப்பு குறைய ஆரம்பித்துள்ளது.வெடி மருந்துகள் காகிதங்கள் அனைத்தும் அதிக விலை கொடுத்து வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .ஆனால் தாங்கள் தயார் செய்யும் பட்டாசுகள் முன்பிருந்த விலைக்கே கொடுக்கப்பட்டு வருகின்றோம் .இதனால் பட்டாசு தொழில் மிகவும் சரிவை எதிர்கொண்டு வருகிறது சிவகாசி முழுவதுமே அச்சுத் தொழில் மற்றும் பட்டாசு தொழிற்சாலை இவைகளை நம்பி மட்டுமே இப்பகுதி மக்கள் வசித்து வரும் நிலை உலகறிந்த உண்மை. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசும் மத்திய அரசும் பட்டாசு தொழிற்சாலை வளர்ச்சிக்கு தானாக முன்வந்து தொழில்நவளர்ச்சிக்கு வழிகாட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் மேலும் தற்போதுள்ள பட்டாசு குறைந்த அளவே தயார் செய்து வருவதாக கூறினார்.இந்த வருட தீபாவளி குறைந்த அளவு பட்டாசு தயாரிப்பு உள்ளதாக கண்ணீர் மல்க கூறினர்
செய்தியாளர் : பா.நீதிராஜன், மதுரை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மதுரை #பட்டாசுதொழிற்சாலை