திசையன்விளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கஸ்தூரிரெங்கபுரத்தை சேர்ந்த ஆறுமுகம்(36), என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பட்டுவேல்(19) என்பவருக்கும் நடந்துமுடிந்த முத்தாரம்மன் கோவில் தசராவில் கணக்குவழக்குகளை கேட்டபோது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது பின் இருவரையும் ஊர் மக்கள் சமாதானபடுத்தி பேசி அனுப்பியுள்ளனர். இதனை மனதில் வைத்துக் கொண்டு ஆறுமுகம் அவரது வீட்டில் இருக்கும்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பட்டுவேல் மற்றும் அவரது நண்பர் பட்டு ராஜா(21) இருவரும் ஆறுமுகத்தை அவதூறாக பேசி கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டுகளை அவரது வீட்டின் முன்பு வீசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆறுமுகம் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு ஜமால் விசாரணை மேற்கொண்டு எதிரிகள் இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்குப் உட்படுத்தினார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திசையன்விளை #திசையன்விளைகாவல்துறை #பெட்ரோல்குண்டு #குண்டுவீச்சு #PetrolBomb #BombThrow