மாணவர்கள் இடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்க புதிய திட்டம் இல்லம் தேடி கல்வி என்னும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் பேட்டி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அளித்த பேட்டியில், குருநாத் பெரும்பட்டு பரவல் சாந்த பொது முடக்க காலங்களில் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் தமிழக அரசு இல்லம் தேடி கல்வி எனும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது திட்டம் மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்பில் கீழ் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் முழுக்க முழுக்க தன்னார்வலர்கள் இத்திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க இருக்கின்றனர் பள்ளி நேரத்தை தவிர மாணவர்களின் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் மூலம் தன்னார்வலர்கள் பங்கேற்புடன் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்புகளை அடிப்படை கல்வியை வழங்க இருக்கின்றனர். இக்கல்வி திட்டமானது 6 மாத காலத்திற்கு தினசரி குறைந்தபட்சம் ஒரு மணி முதல் ஒன்றரை மணி நேரம் வரை தினமும் மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் தன்னார்வலர்கள் மூலம் மாணவி அன்றாட செயல்பாடுகளில் எளிய முறையில் படிப்படியாக பங்கேற்க செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கடலூர் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நீலகிரி தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி மற்றும் விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் இரண்டு வார காலத்திற்கு உன்னோடு அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு அதன் வாயிலாக கிடைக்கப் பெறும் சிறந்த கற்றல் விளைவுகளை அடிமையாக கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும். தன்னார்வலர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதியாக பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதைப்போலவே ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க குறைந்தபட்ச கல்வி தகுதியாக இளங்கலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது இத்திட்டத்திற்கு சேவையாற்ற விருப்பமுடைய முப்பத்தி எட்டு மாவட்டங்களில் தன்னார்வலர்கள் அனைவரும் தங்கள் illamthedikalvi.tnschools.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் தங்கள் புள்ளிவிவரங்களை Illamtherikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 24 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இல்லம் தேடி கல்வி நிலையங்கள் பள்ளிக்கூடங்கள், சமுதாயக் கூடங்கள், மலைவாழ் கிராம மக்கள் வசிக்கும் இடங்கள், குக்கிராமங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது. மேலும் இத்திட்டம் குறித்த சைக்கிள் பேரணி,வீதி நாடகம், பொம்மலாட்டம், கதை சொல்லுதல், திறன் மேம்பாடு செயல்பாடுகள் மற்றும் கலை பயணங்கள் உடன் திட்டம் குறித்து விழிப்புணர்வு நடத்தப்படவுள்ளன என தெரிவித்தார்.
செய்திகள் : ரியாஸ் கான், திண்டுக்கல்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #SchoolReopen #இல்லம்தேடிகல்வி #புதியகல்விதிட்டம் #திண்டுக்கல் #திண்டுக்கல்மாணவர்கள் #திண்டுக்கல்_ஆட்சியர் #மாவட்டஆட்சியர்விசாகன்