வழிப்பறி மற்றும் செல்போன் பறிக்கும் முக்கிய குற்றவாளிகள் இருவரை வேளச்சேரி போலீசார் கைது செய்துள்ளனர் சென்னை வேளச்சேரி வள்ளலார் பாரி நகரைச் சேர்ந்தவர் மோகன் சம்பவத்தன்று வேளச்சேரியில் உள்ள சென்னை சில்க்ஸ் கடை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது அடையாளம் தெரியாத இரு நபர்கள் அவரை வழிமறித்து தாக்கிவிட்டு இவரிடமிருந்து ரெட்மி ப்ரோ என்ற 2 மொபைல் போன்களை எடுத்துச் சென்றுள்ளனர் இதைத் தொடர்ந்து மோகன் வேளச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேளச்சேரி போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்தனர் அந்த குற்றவாளிகள் இருவரும் திருவேற்காடு என்ற இடத்தில் வசிக்கும் பாலாஜி மற்றும் சச்சிதானந்தம் என தெரியவந்துள்ளது இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு இவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றவாளிகள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சென்னை #வழிப்பறி #கொள்ளையன்