95% மக்களுக்கு பெட்ரோல் தேவையே இல்ல!! நான்கு சக்கர வாகனம் பயன்படுத்துபவர்க்கு பெட்ரோல் தேவை!! பாஜக அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சு..
கொரோனா பெருந்தொற்றால் வேலையிழப்பு, ஊதிய இழப்பு என பல இடர்பாடுகளை சந்தித்த மக்கள் தற்போதுதான் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த சூழலில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கியுள்ளது.
எரிபொருள் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான உயர்வை சந்தித்து வருவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால் உ.பி.யை சேர்ந்த அமைச்சர் ஒருவர் இப்பிரச்சினையில் ஒன்றிய அரசை பாதுகாக்கும் விதமாக இதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்று பேசியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த உபேந்திரா திவாரி, “நாட்டில் சொற்ப எண்ணிக்கையிலான மக்களே நான்கு சக்கர வாகனங்களை பயன்படுத்துகின்றனர், அவர்களுக்குதான் பெட்ரோல் தேவைப்படுகிறது என்றும் 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோல் தேவையே இல்லை என்றும் கூறியுள்ளார். 100 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அவர், தனிநபர் வருமான அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே உள்ளது” என தெரிவித்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பாஜக #பெட்ரோல் #டீசல் #பெட்ரோல்_டீசல்_விலை #Petrol_Diesel_Price