அரியலூர் அருகே உள்ள கடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் பூஜா (17). பூஜாவின் தோழியை அப்பகுதியில் உள்ள இளைஞர் ஒருவர் ஒரு தலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது காதலுக்கு தூது போகுமாறு அந்த இளைஞர் பூஜாவிடம் கூறியுள்ளார்.
அதற்கு பூஜா மறுப்பு தெரிவிக்கவே, அந்த வாலிபரும் அவரது நண்பர்களும் சேர்ந்து பூஜாவையும், தந்தை வேலாயுதத்தையும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தொடர்ந்து காவல் நிலையத்திலும் உறவினர்கள் புகார் கொடுத்தனர். ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு வந்த பூஜாவை அந்த வாலிபர்கள் கிண்டலடித்து பேசியதுடன் மிரட்டியும் வந்துள்ளனர். அதனால் மனமுடைந்த சிறுமி சம்பவத்தன்று விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், அப்பகுதியில் சிறுமியின் உடலை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து சிறுமியின் உடலை உறவினர்கள் தகனம் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அரியலூர் #காதல்_தூது_தற்கொலை #காதல்_கொடுமை #RipPooja