திமுக அதிமுக இடையே வாக்குவாதம் ;தேர்தல் அதிகாரி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தாங்கி ஊராட்சி மன்ற துணை தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
6-வார்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் துணைத்தலைவர் காண போட்டியில், இரண்டு பேர் போட்டியிட்டனர். அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த இரண்டு பேர் போட்டியிட்டனர். இந்த இரு கட்சியை சேர்ந்த நபர்களும் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருந்தனர்.
இந்தக் கூச்சல் குழப்பத்தை தடுப்பதற்காக தேர்தல் அதிகாரி அரிகிருஷ்ணன் என்பவர் அவர்களிடம் சமரச முயற்சியில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் அதிகாரியிடம் திமுக மற்றும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்து, அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
தேர்தல் அதிகாரி உயிரிழந்தது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி உயிர் இழந்த காரணத்தினால் துணை தலைவருக்கான தேர்தல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வெளியான முதல் கட்ட தகவலின்படி, தேர்தல் அதிகாரி ஹரி கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #உள்ளாட்சிதேர்தல் #தேர்தல்_அதிகாரி_மரணம் #திமுக #அதிமுக