சொத்து பிரச்னையில் அண்ணனை உயிருடன் பெட்ரோல் ஊற்றி சகோதரன் கொலை செய்த கொடூரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள விளைசித்தேரி பகுதியில் வெள்ளை என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ், புருஷோத்தமன், ராஜசேகர் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் புருஷோத்தமன் நெசவு தொழில் செய்து வருகிறார். திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
சகோதரர்களான ரமேஷ் மற்றும் ராஜசேகர் ஆகிய இருவரும் சென்னையில் பணிபுரிந்து வந்துள்ளனர். இவர்களுக்கு குடும்பத்தின் பூர்வீக சொத்தாக வீடு இருந்துள்ளன. இதனையடுத்து 3 மகன்களுக்கும் வெள்ளை சொத்தை பிரித்து கொடுத்துள்ளனர். இதில் புருஷோத்தமனுக்கு சொத்தின் பங்கை கொடுப்பதாக கூறி 7 லட்சம் ரூபாயில் முதல் தவணையாக 1லட்சம் வழங்கபட்டுள்ளது. ஆனால், மீதி தொகையை கொடுக்க ராஜசேகர் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் சகோதரர்களான இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சொத்து விவகாரத்தில் அண்ணன் தம்பி இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராஜசேகர் சகோதரனை கொள்ள முடிவெடுத்தார்.
அதன்படி தன்னுடைய அண்ணன் புருஷோத்தமன் வீட்டு மாடியில் தூங்கி கொண்டிருக்கும் பெட்ரோல் கேனுடன் மாடிக்கு சென்றுள்ளார். அங்கு உறங்கிக்கொண்டிருந்த அவர் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் தீயில் கருகி அலறல் சத்தததுடன் எழுந்து மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் புருஷோத்தமனை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர். எனினும் பெரியளவில் தீக்காயம் ஏற்பட்டதால் புருஷோத்தமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அண்ணன் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த தம்பியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திருவண்ணாமலை #அண்ணன் #தம்பி