எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்த அதிமுகவிற்கு தற்போது டாக்டர் பட்டம் பெற்ற பின் திமுகவின் அடக்குமுறையை சந்திப்பது பெரிய விஷயமல்ல :செல்லூர் ராஜூ பேச்சு
மருது சகோதரர்கள் மற்றும் தேவர் ஜெயந்திக்கு மதுரைக்கு வரும் கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சரும் மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆன செல்லூர் ராஜூ தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற இருபத்தி நான்காம் தேதி தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுசகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க வரும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்களுக்கு வரவேற்பு வழங்குவது குறித்தும் மருது சகோதரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழக சார்பாக மரியாதை செலுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மேலும் எதிர்வரும் 30ஆம் தேதி கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வரும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோருக்கு வரவேற்பு வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ பேசுகையில்
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு மரியாதை செய்ய உள்ளனர் என்றும்
தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி சமுதாய இடைவெளியுடன் கவசங்கள் அணிந்த படி இந்த நிகழ்ச்சிகளில் கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்
மேலும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்கள் தெரிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நிகழ்வுகள் நடைபெறும் என்றார்
மேலும்
24 ஆம் தேதி மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு ஒ.பி.எஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளனர் எனவும்
30 ஆம் தேதி பசும்பொன் செல்லும் முன் கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் சிலைக்கு மாலை மரியாதை செய்ய உள்ளனர் என்றார்
மேலும் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் குறித்த கேள்விக்கு ???
முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் நடைபெறும் சோதனைகள் குறித்து அதிமுகவினர் கவலைப்படவில்லை என்றார்
கருணாநிதி காலத்திலேயே சோதனைகளை சந்தித்து உள்ளோம் நாங்கள்
எல்.கே.ஜி படிக்கும் போதே அச்சுறுத்தலை சந்தித்த அதிமுகவிற்கு தற்போது டாக்டர் பட்டம் பெற்ற பின் அடக்குமுறையை சந்திப்பது பெரிய விஷயமல்ல என்றார்
செய்திகள் : பா.நீதிராஜன், மதுரை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அரசியல் #செல்லூர்_ராஜூ #SellurRaju #அதிமுக #திமுக #ADMK #DMK