இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த 2 இலங்கை மீனவர்கள் கைது: அவர்களது பைபர் படகுகள் பறிமுதல் செய்து இந்திய கடற்படை நடவடிக்கை.
இந்திய கடல் எல்லை பரப்பில் இந்திய கடற்படையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக பைபர் படகில் வந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் இந்திய கடற்படையினர் கைது செய்து நாகை துறைமுகத்துக்கு அதிகாலை அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் கடலோர காவல் குழும கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், இலங்கை வல்வெட்டுத்துறை ஆதிகோவிலடியை சேர்ந்த நிமலதாஸ் என்பவருக்குச் சொந்தமான பைபர் படகில் அவரும் கஜீபன் என்பவரும் நேற்றுக்காலை வல்வெட்டுத்துறையில் இருந்து மீன் பிடிக்க வந்தபோது மாலையில் எல்லை தாண்டி மீன் பிடித்தது தெரியவந்தது. இதையடுத்து நிமல தாஸ், கஜீபன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த கடலோர காவல் குழும போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகள் : ச.ராஜேஷ், நாகை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #நாகை #இலங்கை_மீனவர்கள் #SriLaanga #SriLanga_Fisherman