காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் படுகொலை, தேவமணி கொலை செய்யப்பட்டதால் காரைக்காலில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
காரைக்கால் மாவட்ட பாமக செயலாளராக தேவமணி(வயது53) இருந்து வந்தார், இவரது வீடு திருநள்ளார் மெயின் ரோடு சுரக்குடி சந்திப்பு அருகேயும், கட்சி அலுவலகம் திருநள்ளாறு சனிபகவான் கோவில் அருகிலும் உள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு தேவமணி கட்சி அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி அவரது ஆதரவாளர் உடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார், அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், தேவமணி அவர் வீட்டில் அருகே வந்த போது அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள் தேவ மணியை சரமாரியாக வெட்டித் தள்ளி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இச்சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் மற்றும் தேவமணியின் ஆதரவாளர்கள் அவரை உடனடியாக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் தலையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டதால் தேவமணி சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து திருநள்ளாறு காவல் நிலைய ஆய்வாளர் லெனின் பாரதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் தேவமணி பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளர் என்பதால் ஜாதி ரீதியாக பிரச்சனைகள் வெடிக்க வாய்ப்புள்ளதால் காரைக்காலில் முக்கிய பகுதிகள், திருநள்ளாறு சாலை மற்றும் தேவமணி வீடு, கட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த தேவமணியன் உடல் காரைக்கால் பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தொடர்ந்து ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் கூடி வருகின்றனர், மேலும் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை யும் தேவமணியின் ஆதரவாளர்கள் தாக்க முயன்றதால் அங்கு தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
செய்திகள் : ச.ராஜேஷ், நாகை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #காரைக்கால் #பாமக #பாட்டளிமக்கள்கட்சி #பாமக_செயலாளர்கள் #படுகொலை