நூறு நாள் வேலைத்திட்டத்தை பற்றி குறை சொல்பவர்கள் நேரில் வந்து பார்த்துவிட்டு இதை சொல்ல வேண்டும். தமிழர்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக இலங்கை அமைச்சருக்கு மோடி அரசு வரவேற்றது கண்டனத்துக்குரியது. ராஜபக்ச குடும்பத்திற்கு குணிந்து கொடுக்கும் அரசாக மோடி அரசு உள்ளது என மாணிக் தாகூர் எம்பி குற்றம் சாட்டினார்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடி கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பணிகளை விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.இதனைத் தொடர்ந்து., செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக் தாகூர் கூறுகையில்.?நூறு நாள் வேலைத் திட்டம் வீண்னென்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கூறுகின்றனர். அவர்கள் நூறு நாள் வேலைத்திட்ட பணிகளை நேரடியாக வந்து ஆய்வு செய்திருக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் பேசியிருக்க வேண்டும். ஆனால்., நேரில் வராமல் அது குறித்து எதுவும் தெரியாமல் குறை சொல்வது என்பது கண்டனத்துக்குரியது.100 நாள் வேலைத் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப் படுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது என செய்தியாளர்களின் கேள்விக்கு.?100 நாள் வேலை திட்டம் வருடத்திற்கு 365 நாட்கள்., விவசாய பணிகள் நடைபெறும். இதை தவிர்த்து மீதமுள்ள 100 நாட்கள் விவசாயப் பணிகள் இல்லாத நாட்கள் என்பதால் இந்த காலகட்டங்களில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் நடைபெறும். இதனை தெரியாமல் சினிமாவில் வசனம் பேசுவது போன்று சிலர் பேசி வருகிறார்கள் என தெரிவித்தார்.தொடர்ந்து., உத்தரப் பிரதேசத்துக்கு இலங்கை அமைச்சர் வருகை குறித்த செய்தியாளரின் கேள்விக்கு.?மோடி அரசு தொடர்ந்து தமிழர்களின் மனதை புண்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் துரத்தப்பட்டு., ஒரு மீனவர் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த இலங்கை அமைச்சருக்கு மத்திய அரசு மிக பிரமாண்டமாக வரவேற்பு கொடுப்பது தமிழர்களின் எண்ணங்களை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தற்போதைய மோடி அரசு ராஜபக்ச குடும்பத்திற்கு குனிந்து கொடுக்கக்கூடிய ஒரு அரசாக உள்ளது என மாணிக்கம் தாகூர் M.P தெரிவித்தார்.
செய்திகள் : பா.நீதிராஜன், மதுரை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #நூறுநாள்வேலைத்திட்டம் #எம்.பி.மாணிக்_தாகூர் #மோடி #பிஜேபி #பாஜக