பிரபு நடித்த ‘வேலை கிடைச்சுருச்சு’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மன்சூர் அலிகான்.
அதன் பின்னர் ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார். இதையடுத்து, தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்தார்.
அதற்கு பிறகு எல்லா மொழிகளிலும் சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்ததுடன் ஏராளமான படங்களை தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். அவ்வப்போது எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கும் இவர், தற்போது அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து வீடு கட்டியதற்காக இவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மன்சூர் அலிகானுக்கு சொந்தமாக வீடுகள் உள்ளது.
அந்த வகையில் சூளைமேடு, பெரியார் பாதையிலும் இவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டை சுமார் 2500 சதுரடி அரசு புறம்போக்கு நிலத்தை அபகரித்து கட்டியுள்ளார் மன்சூர் அலிகான். இதனால் தற்போது இவரது வீட்டிற்கு சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர் அரசு அதிகாரிகள். இந்த சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சினிமாசெய்திகள் #மன்சூர்அலிகான் #புறம்போக்கு_நிலம்_ஆக்கிரமிப்பு #மன்சூர்_வீடு_சீல் #MansoorAlikhan