செய்திகள்
Trending

இருளப்பட்டி அருகே தோட்டத்தில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டிச் சென்றதால் பரபரப்பு….

இருளப்பட்டி அருகே தோட்டத்தில் இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டிச் சென்றதால் பரபரப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அ.பள்ளிப்பட்டி அருகே உள்ள இருளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சந்திர குமார் செம்மரங்களையும் அதனுடன் சந்தனமரத்தையும் 15 வருடங்களாக தனது தோட்டத்தில் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு அவர் வீட்டின் அருகே இருந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் சிலர் வெட்டி சந்தன மரத்தை கடத்தி சென்றுள்ளனர்.

காலையில் எழுந்து சந்திரகுமார் பார்த்த போது சந்தன மரம் வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இந்நிலையில் இதுகுறித்து அவர் அ.பள்ளிப்பட்டி காவல்துறையினருக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து விவசாயி சந்திரகுமார் கூறுகையில்

இருளப்பட்டி கிராமத்தில் உள்ள சின்ன கல்ராயன் மலையில் ஆசிய கண்டத்திலேயே மிக விலையுயர்ந்த சந்தன மரங்கள் விளைய கூடிய இடமாக இந்த சின்ன கல்ராயன் மலை இருந்தது .ஆனால்
சில வருடங்களுக்கு முன்பு சில மர்ம நபர்கள் இந்த மலையில் சந்தன மரங்களைக் வெட்டி சென்று விட்டதால் தற்போது இந்த மலையில் வெறும் மரங்களும் பூச்செடிகளும் மட்டுமே உள்ளது. மேலும் என்னை போன்று இப்பகுதியில் உள்ள ஒரு சில விவசாயிகள் சந்தன மரங்களை வளர்த்து வருகின்றோம். என் வீட்டின் அருகே இருந்த சந்தன மரம் கடந்த இரண்டு வருடங்களாக கனி காய்த்து இருந்த இந்த சந்தன மரத்தை நேற்று இரவு சில மர்ம நபர்கள் வெட்டி கட்டைகளை எடுத்து சென்றுள்ளனர். மேலும் மழைப்பொழிவை தரும் சந்தன மரங்களை சின்ன கல்ராயன் மலையில் இருந்து சில மர்ம நபர்கள் வெட்டி சென்றதின் காரணமாக இப் பகுதிகளில் கடந்த 17 வருடங்களாக பருவ மழை இல்லை எனவும் தற்போது பருவ மாற்றத்தின் காரணமாக இப்பகுதிகளில் இரண்டு வருடங்களாக மழை பெய்து வருகின்றன எனவும் சின்ன கல்ராயன் மலையில் சந்தன மரங்களை வெட்டிய மர்மநபர் களையும் தோட்டங்களில் வைத்துள்ள மரங்களை வெட்டிச் செல்லும் வருபவர்களையும் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் கண்டிபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #சந்தனமரம் #தர்மபுரி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button