செய்திகள்
Trending

திமுகவின் பெட்ரோல் டீசல் விலை அறிக்கை வெற்றாகிவிட்டது… ஓபிஎஸ் விமர்சனம்!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை பார்க்கும் பொழுது திமுகவின் தேர்தல்ச அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது. -தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் பேட்டி

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் செய்தியாளர் சந்தித்தார் அப்போது கூறியதாவது:-

*நகராட்சித் தேர்தலில் அதிமுகவின் வியூகம் குறித்த கேள்விக்கு:*

நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் அதிமுக தேர்தலை எதிர்நோக்கி தயாராக உள்ளது.

*குறைக்கப்பட்ட பெட்ரோல் விலை கூடியது குறித்த கேள்விக்கு:*

திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்று கூறியிருந்தோம். அது தற்போது நிரூபணமாகியுள்ளது.

*முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது நடைபெறும் ரெய்டு குறித்த கேள்விக்கு:*

நான் ஏற்கனவே கூறி இருந்ததை போல இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திமுக #பெட்ரோல்டீசல்விலைகுறைப்பு #பெட்ரோல்_டீசல்_விலை #தமிழ்நாடு #TamilNadu #Petrol_Diesel_Price

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button