*ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் கொன்று குவித்த ராஜபக்சே அவரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்., மதுரை விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி.*
சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்.
ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையும் கொன்று குவித்த ராஜபக்சே அவரைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட வேண்டுமென தமிழினம் போராடிக் கொண்டிருக்கிறது. உலகம் தழுவிய அளவில் மனித உரிமை ஆர்வலர்களும், தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை உள்ளவர்களும், ராஜபக்சேவை உரிய முறையில் விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்திய ஒன்றிய அரசு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்து உத்தரபிரதேச விமான நிலையத்தை திறக்க வைத்து இருப்பது கண்டனத்துக்குரியது. உத்தரபிரதேச மாநில அரசும் மத்திய ஒன்றிய அரசின் இத்தகைய செயலை விடுதலை சிறுத்தை கட்சி கண்டிக்கிறது.
_தமிழகத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது சோதனை நடத்துவது குறித்த கேள்விக்கு._
விசாரணையில் உண்மை தெரியவரும் உண்மையில் அவர்கள் குற்றம் ஏதும் செய்யவில்லையெனில் அவர்களை சட்டம் ஒன்றும் எதுவும் செய்யாது.
மோடி அரசின் சாதனை இதுதான், எண்ணெய் நிறுவனங்களின் முழு கட்டுப்பாட்டில் ஒப்படைத்து இருப்பதால் 3 மாதத்திற்கு ஒருமுறை பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துகின்றன. பெட்ரோல் டீசல் விலை கட்டுப்படுத்துவதற்கு எந்த ஒரு முனைப்பும் மத்திய அரசு காட்டவில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்காத நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கு முழுமையாக மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறினார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #ராஜபக்சே #திருமாவளவன் #Rajpakse