நாகையில் முதல் முறையாக காவல்துறை சார்பில் துப்பாக்கி கண்காட்சி நடைபெற்றது : பொது மக்கள் ஆர்வமாக கண்டுகளித்தனர்.
நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி கண்காட்சி நடைபெற்றது. நாகப்பட்டினம் அவுரித்திடலில் நடைபெற்ற துப்பாக்கி கண்காட்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தொடங்கி வைத்தார். கண்காட்சியில் கைத்துப்பாக்கி, ரைபிள், ரிவால்வர், கார்பன் கன், கையெறி குண்டுகள், ஏகே 47 , வஜ்ரா வாகனத்தில் பயன்படுத்தப்படும் கண்ணீர் புகை குண்டுகள் உள்ளிட்டவைகள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன. காவல் துறை சார்பில் முதல் முறையாக நடைபெறும் துப்பாக்கி கண்காட்சி என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். கண்காட்சியில் துப்பாக்கிகளின் செயல்பாடுகள் குறித்து காவல்துறையினர் பொது மக்களுக்கு விளக்கிக் கூறினார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #நாகை #துப்பாக்கி_கண்காட்சி #Nagapatnam #GunExhibition