“நமக்கு ரிஸ்க்குலான் ரஸ்க்கு சாப்பிடமாதிரி” இரண்டு பேருந்துக்கு நடுவில் சிக்கிய தம்பதியினர்….
புதுச்சேரி அருகே கல்மண்டபம் கிராமத்தில் புதுச்சேரி நோக்கி பேருந்து ஒன்று சென்றுள்ளது. அதேசாலையில் கைக்குழந்தையுடன் ஒரு தம்பதி பைக்கில் முந்திச்செல்ல முயன்றனர். அப்போது எதிர்திசையில் மற்றொரு பேருந்து வந்துள்ளது. எனினும் ஏனோ அவசரத்தில் முன்னாள் சென்ற பேருந்தை முந்திச்செல்ல முயன்றப்போது, எதிரே வந்த பேருந்தின் மீது தம்பதி சென்ற இருசக்கர வாகனம் மோதியது.
இரு பேருந்துகளுக்கும் இடையே சிக்கிய தம்பதி உயிர் தப்பினர். இதனை இரு பேருந்துகளில் இருந்து பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதில் தாயின் கையில் இருந்த கைக்குழந்தை எவ்வித காயமும் இன்றி தப்பியது. இந்த விபத்து சம்பவம் குறித்து நெட்டப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து பேருந்துகளில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. கைக்குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அவரசம் காட்டியதால் ஏற்பட்ட விபத்து காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள்