கொரோனாவை விட வீரியமான வைரஸ் ஒன்று தாக்க உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவின் கொடிய தாக்கம் உலகையே ஆட்டிப்படைத்த நிலையில் தற்போது தான் இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்புகிறது . அதிலும் சீனா , ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது .
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் நோயின் வீரியம் சற்றே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதம் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கொரோனாவைவிட வீரியமான மற்றொரு வைரஸ் உலகை தாக்க தயாராகிவிட்டது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கோழிகளிடமிருந்து ஆபத்தான வைரஸ் பரவப் போகிறது என்று கூறப்படுகிறது.
கோழிப் பண்ணையில் ஆபத்தான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவை பரவினால் அதன் பாதிப்பு கொரோனா தொற்றுநோயை விட மோசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வகை பறவைக் காய்ச்சலுக்கு H5N8 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மனிதர்களுக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸாக இருக்கிறது. இந்நிலையில் இந்த புது வைரஸ் தாக்கத்திற்கு தடுப்பூசி கண்டுபிடித்தால் மட்டும் மனிதர்கள் அழிவில் இருந்து தப்ப முடியும்.
இல்லை என்றால் கொரோனா ஏற்படுத்தியதை விட மோசமான நிலைமையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது, கண்டறியப்பட்டுள்ள பறவைக் காய்ச்சலின் எட்டு வகைகளும் மனிதர்களை பாதிக்கக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #கொரோனா