நெருப்புக்கு இரையாகியது சீர்காழி அருகே உள்ள கோழிப்பண்ணை : இயற்கையா ? அல்லது செயற்கையா ??
சீர்காழி அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் கோழிப்பண்ணையில் திடீர் விபத்து.1.5 லட்சம் மதிப்பிலான கோழிகள் தீயில் கருகி உயிரிழப்பு.மின்கசிவா அல்லது யாரேனும் தீ வைத்தார்களா என புதுப்பட்டினம் போலிசார் விசாரனை.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தாண்டவன்குளம் கிராமத்தில் தமிழ்மாறன் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார்.தற்போது திபாவளி பண்டிகையை முன்னிட்டு 500 க்கும் மேற்பட்ட கோழிகள் விற்பனைக்காக தயார் நிலையில் இருந்தது.இந்நிலையில் கோழிப் பண்ணையில் திடீர் து விபத்து ஏற்பட்டது.அருகில் வீடுகள் இல்லாததாலும் காற்றின் வேகத்தாலும் கீற்று கொட்டகை முழுவதும் தீ மளமளவென பரவியது.தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.ஆனால் அதற்குள் பண்ணையில் இருந்த 1.5 லட்சம் மதிப்பிலான 500 க்கும் மேற்பட்ட கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தது.இது குறித்த புகாரின் பேரில் புதுப்பட்டினம் போலிசார் வழக்கு பதிந்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் மர்ம நபர்காள் தீ வைத்தனரா? என்ற கோணத்தில் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகள் : ச.ராஜேஷ், மயிலாடுதுறை
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #TamilNadu #கோழிப்பண்ணை #மயிலாடுதுறை #FireAccident