“என்னதான் ஆச்சு ஓபிஎஸ்க்கு” அன்று எதிர்த்து தர்மயுத்தம், இன்று சேர்க்க பரிந்துரை” விஜயகுமார் பேட்டி..
சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில், “சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கி, சசிகலா மற்றும் சசிகலாவின் சார்ந்தவர்கள் உடன் அதிமுகவில் சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
அப்படி வைத்துக் கொண்டால் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அந்த தீர்மானத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், நிர்வாகிகள், தலைமை நிர்வாகிகள் அனைவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்கட்டும்., இரண்டாவதாக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு எடப்பாடி கே பழனிசாமி தலைமையிலான அரசு நடந்து கொண்டிருந்தது. அப்போது அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தர்ம யுத்தம் நடத்தினார்.
அப்போது அவர் வைத்த ஒரே கோரிக்கை, சசிகலா எந்த ஒரு நேரத்திலும், எந்த ஒரு சூழ்நிலையிலும் மீண்டும் அதிமுகவில் இணைய மாட்டார் என்றால் மட்டுமே நாம் ஒன்றிணைவோம் என்று தெரிவித்த நிபந்தனையை விடுத்திருந்தார். அதனை இந்த நேரத்தில் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
மூன்றாவதாக ஒரு விஷயம். அவர்கள் தர்மயுத்தம் நடத்தியதே சசிகலா மற்றும் அவர்களை சார்ந்தவர்களை எதிர்த்துதான் தர்ம யுத்தமே நடத்தினார். இந்த நேரத்தில் இதனை நான் நினைவுபடுத்த வேண்டிய கடமையாக நான் கருதுகிறேன். ஓபிஎஸ் அவர்களின் பேட்டியை முழுமையாக கேட்டு அறிந்த பின்னர் செய்தியாளர்களை மீண்டும் சந்திப்பேன்” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #அதிமுக #சசிகலா #ஓபிஎஸ் #OPS #விஜயகுமார் #ADMK #அரசியல் #TamilNaduPolitical