“இதுலான் ரொம்ப தப்புங்க” குற்றாலத்தில் நீட்டிக்கப்படும் தடை!!கடை உரிமையாளர்கள் ஆவேசம்!!
கொரோனா பாதிப்பு முதல் அலை காரணமாக 2019 மார்ச் மாதம் 23 ஆம் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவ மழைக்காலங்களில் சுற்றுலா செல்வதற்கு அருமையான சுற்றுலா தலமாக குற்றாலம் கருதப்பட்டது. ஜூன் முதல் ஆகஸ்ட் மாத கடைசி வரை நீடிக்கும் சீசனின் போது, தமிழ்நாடு மட்டுமில்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தங்களது மனம் கவர்ந்த குற்றாலத்துக்கு ஆண்டுதோறும் சீசன் காலத்தில் வந்து அருவியில் நீராடி செல்வதை சுற்றுலா பயணிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் சிலர் வார இறுதியில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குற்றாலத்துக்கு சென்று வருகின்றனர்.
இவ்வாறு கலை கட்டிய குற்றாலம் கொரோனா பரவல் காரணமாக கலை இழந்தது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் குற்றாலத்தில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மக்களின் வருகையை நம்பியுள்ள அங்குள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
கொரோனா பாதிப்பு முதல் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. சுற்றுலாத் தலங்கள், கோவில்கள், திரையரங்குகள் போன்ற இடங்களில் கட்டுப்பாட்டுக்குள் விதிக்கப்பட்டது. பின்னர் சிறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக குற்றாலத்தில் தனியார் விடுதிகள் அனைத்தும் மூடப்பட்டன.
பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, அனைத்து இடங்களிலும் செப்டம்பர் 1ம் தேதி முதல் விடுதிகள் திறக்கப்பட்டன. ஆனால், குற்றாலத்தில் மட்டும் தங்கும் விடுதிகளைத் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், விடுதியின் உரிமையாளர்கள் இக்கட்டான சூழலில் உள்ளனர்.
கொரோனா பாதிப்பு இரண்டாம் அலையை ஏற்படுத்தியது. மீண்டும் அனைத்து இடங்களிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது, ஓரளவு கொரோனாவின் இரண்டாம் அலை கட்டுப்பாடு அடைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கோவில்களில் மக்கள் அதிகமாக கூடுவதால் வார இறுதி நாட்களில் மக்கள் கோவிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது மற்றும் திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது கொரோனா தடுப்பூசி போட மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில் கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. மதுக்கடைகள் முழுவதும் திறக்கப்பட்டன, கோவில்களுக்கு முழு நேரம் மக்கள் அனுமதிக்கபட்டனர் மற்றும் திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் மக்கள் அனுமதிக்கபட்டனர். அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் குற்றாலத்தில் மட்டும் மக்கள் குளிப்பதற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசையோடு குற்றாலம் வரும் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் மன வருத்தத்திற்கு ஆளாகின்றனர்.
சாரல் பருவத்தில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான வியாபாரிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக கேள்விக்குறியாகிவிட்டது.
செய்திகள் : மகாராணி, தென்காசி
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #குற்றாலம் #ஊரடங்குநீட்டிப்பு #குற்றாலம்_தடை #தமிழ்நாடு #தமிழகஅரசு #TamilNadu #TamilNaduGovernment #Coutrallam #Lockdown