பனை மரத்தை வேருடன் பிடுங்கிய நிறுவனம்!! நெக்ஸ்ட் சப்-கலெக்டர் எண்ட்ரீ…
தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்களின் அழிவை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில், பனை மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டரின் அனுமதி பெறவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்யாறு – சுமங்கலி சாலையில், நெடும்பிறை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கருங்கல் ஜல்லி உடைக்கும் ஆலை அமைய உள்ளது. அதற்காக, அந்த இடத்தை சுத்தம் செய்து சமன் படுத்துவதற்காக சாலையோரம் இருந்த 20க்கும் மேற்பட்ட பனை மரங்கள் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், வேரோடு பிடுங்கி எறியப்பட்டன.
பனை மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது குறித்து இயற்கை ஆர்வலர்கள் படத்துடன் உதவி கலெக்டர் விஜயராஜிடம் புகார் செய்தனர். வேரோடு பிடுங்கி எறியப்பட்ட பனை மரங்களில் 20 அடி உயரமுள்ள 4 பனை மரங்களை உதவி கலெக்டர் உத்தரவின் பேரில் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அதே பகுதியில் மீண்டும் நடப்பட்டன.
பனை மரங்களை வெட்டினால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என உதவி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பனைமரம்