மொறுமொறுன்னு! பல்லி பக்கோடா!! அதிர்ச்சியில் வாடிக்கையாளர்…
திருநெல்வேலி நகரின் ஸ்வீட் கடை ஒன்றில் தயார் செய்யப்பட்ட பகோடாவில், பல்லி செத்து கிடந்தது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவ கல்லூரி அருகே ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ் என்ற ஸ்வீட் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று அம்மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது வீட்டிற்காக பகோடா வாங்கி சென்று உள்ளார்.
வீட்டுக்கு சென்று பக்கோடாவை பிரித்து பாத்திரத்தில் கொட்டிய போது, அதில் எண்ணெயில் பொரித்த நிலையில் ஒரு பல்லி ஒன்று கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர், உடனடியாக அனைவரையும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, சென்னை உணவு பாதுகாப்புத்துறைக்கு வாட்ஸ் அப் மூலம் புகார் அளித்தார்.
இதனையடுத்து சென்னை உணவு பாதுகாப்புத் துறையினர், உடனடியாக நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு, இவரின் புகார் கொடுத்து தகவல் தெரிவித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உடனடியாக ஸ்ரீராம் லாலா ஸ்வீட்ஸ் கடைக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அந்த ஸ்வீட் கடையில் உணவு பண்டங்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் இல்லாமல் திறந்தபடியே இருந்துள்ளது. மேலும், பிளாஸ்டிக் டப்பாக்களில் குலோப் ஜாமுன் உள்ளிட்ட திண்பண்டங்கள் காலாவதி ஆகி இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து அனைத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை மறுபடியும் பயன்படுத்தாத மூடி அழித்தனர். மேலும் அந்த ஸ்வீட் கடையில் உள்ள தின்பண்டங்கள், ஸ்வீட்களை ஆய்வுக்காக தஞ்சாவூர் அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த கடைக்கு எதிராக அமைந்துள்ள அந்த கடையின் மற்றொரு கிளையிலும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த கடையின் தின்பண்டங்களையும் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், “தின்பண்டங்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவு வருவதற்கு 20 நாட்கள் வரை ஆகலாம். அதே நேரத்தில் இந்த கடையை 24 மணி நேரத்தில் சுகாதார பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளோம்” என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பக்கோடா #பல்லி_பக்கோடா #திருநெல்வேலி