மாடியில் மின்கம்பி:தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சிறுவன்!! பெற்றோர்கள் வேதனை…
திருவாரூர் மாவட்டத்தில் வீட்டு மாடியில் சிறுவர்கள் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது, மாடியின் மேல் பகுதியில் மின்கம்பி உரசி, சிறுவன் மாடியிலிருந்து தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நேதாஜி நகர் பகுதியின் ஒரு வீட்டின் மாடியில் மீது கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
வீட்டின் மாடியில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, பந்தைப் பிடிக்க சிறுவன் ஒருவன் முயன்றபோது, மாடியின் அருகில் இருந்த மின் கம்பியின் மீது உரசி, மாடியில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
இதில் மின்சாரம் பாய்ந்து அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #மின்கம்பி #திருவாரூர் #சிறுவன்_உயிரிழப்பு