சங்கராபுரம் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்தால் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பட்டாசு விபத்து ஏற்பட்ட காட்சிகளை வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் கடையில் பட்டாசு பராமரிக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதால் முறையாக பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற பட்டாசு கடைகளுக்கு அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீவிபத்தால் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பட்டாசு விபத்து ஏற்பட்ட காட்சிகளை வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் கடையில் பட்டாசு பராமரிக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Three killed & ten more injured in fire at firecracker store in #Sankarapuram, #Kallakurichi district on Tuesday evening @NewIndianXpress@xpresstn pic.twitter.com/mqJmNoRGV1
— Bagalavan Perier B (@Bagalavan_TNIE) October 26, 2021
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #பட்டாசுகடை #தீவிபத்து #கள்ளிக்குறிச்சி