தலைமை செயலகம் முற்றுகையிட்டு பெரும் போராட்டம்…தமிழ்நாடு மீனவர்கள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு தங்களை நேரில் அழைத்து பேசவில்லை என்றால் தலைமைச் செயலகம் முற்றுகையிடப்படும் என்றும், நவம்பர் 10ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் எனவும் மீனவ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு கடலோர அனைத்து மீனவர் கூட்டமைப்பு மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 4 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதன்படி, தமிழ்நாடு மீனவர்களுக்கு டீசல் விலையை குறைத்து உற்பத்தி விலையில் டீசலை வழங்க வேண்டும். தமிழ்நாடு மீனவரை இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதைக் கண்டித்தும், மத்திய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2021 இந்திய கடல் மீன் மசோதா சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது.
தமிழ்நாடு முதல்வரை 10ஆம் தேதிக்குள் சந்திக்க உள்ளதாகவும், சந்திக்க மறுத்தால் வரும் 11ஆம் தேதி தமிழ்நாடு கடலோர அனைத்து விசைப்படகு நாட்டுப்படகு, வல்லம் உள்ளிட்ட அனைத்து படகுகளையும் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர் சங்க கூட்டமைப்பின் பொது செயலாளர் என்ஜே போஸ் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் தமிழ்நாடு அளவில் அனைத்து மீனவ அமைப்புகளையும் ஒன்று திரட்டி வரும் 15ஆம் தேதி சென்னையில் முற்றுகையிட்டு மாபெரும் கண்டன போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு அளவில் உள்ள அனைத்து மீனவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #தமிழகஅரசு #முகஸ்டாலின் #மீனவர்கள் #தமிழ்நாடுகடலோரமீனவர்கள்கூட்டமைப்பு #PetrolDiesel