சம்பளம் கிடையாது..! தன்னார்வலர்களாக கருதப்படுவர்!! அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு…
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. அதனால் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்பட்டுள்ளது.
அந்த கற்றல் இடைவெளியை குறைப்பதற்காக தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் இல்லம் தேடி கல்வித் திட்டம் நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் இணைந்து சேவையாற்றும் தன்னார்வலர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு தன்னார்வலர்களை தேர்வு செய்யும் முறையில் அரசு தலையீடு இருக்காது என்று சற்று முன் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், தன்னார்வலர்களுக்கு சம்பளம் கிடையாது; ஊக்கத் தொகையாக மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், தன்னார்வலர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருக்கும் வகையில் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #இல்லம்தேடிகல்விதிட்டம் #அன்பில்மகேஷ்பொய்யாமொழி #தமிழ்நாடு