டாஸ்மாக் ஊழியர்களுக்கு 40 சதவீதம் போனஸ் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் முள்ளிப்பாடி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் ராமு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சீனிவாசன், நிர்வாகிகள் கோபால், ஜெயசீலன் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் அரசு அறிவித்துள்ள 10 சதவீதம் போனஸ் பத்தாது கருணையுடன் சேர்த்து 40 சதவீதம் போனஸ் டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். 18 ஆண்டுகளாக பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிற்சங்கத் உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். கூட்டு பேர கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டது.
செய்திகள் : ரியாஸ், திண்டுக்கல்
#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திண்டுக்கல் #டாஸ்மாக் #டாஸ்மாக்ஊழியர்கள் #Tasmac #Dindukal