செய்திகள்
Trending

17 நாட்களுக்கு வங்கிகள் கிடையாது!!

17 நாட்களுக்கு வங்கி கிடையாது!!

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் வரும் நவம்பர் மாதத்தில் மொத்தம் 17 நாட்கள் மூடப்படுகிறது. எனவே, வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதற்கேற்ப தங்கள் பரிவர்த்தனைகளைத் திட்டமிட அறிவுறுத்தப்படுகின்றனர்.

ரிசர்வ் வங்கியின் விடுமுறை நாட்காட்டியின் படி, வார இறுதி நாட்களைத் தவிர, பண்டிகை விடுமுறைகள் சில உள்ளூர் அல்லது பிராந்திய கிளைகளுக்கு மட்டுமே. பொது விடுமுறைகள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள வங்கிகளால் அனுசரிக்கப்படுகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் இந்த நாட்களில் மூடப்படும்.

நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்கள்:

நவம்பர் 1 – கன்னட ராஜ்யோத்சவா (பெங்களூரு/இம்பால் மாநிலங்களில் மட்டும் விடுமுறை)

நவம்பர் 3 – நரக் சதுர்தசி (பெங்களூரில் விடுமுறை)

நவம்பர் 4 – தீபாவளி (அகர்தலா, அகமதாபாத், ஐஸ்வால், பேலாபூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், தமிழ்நாடு, டேராடூன், காங்டாக், கவுகாத்தி, ஹைதராபாத், இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெ ல்லி, பனாஜி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுமுறை)

நவம்பர் 5 – விக்ரம் சம்வத் புத்தாண்டு/கோவர்தன் பூஜை (அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜெய்ப்பூர், கான்பூர்,லக்னோ, மும்பை மற்றும் நாக்பூர் மாநிலங்களில் விடுமுறை)

நவம்பர் 6 – லக்ஷ்மி பூஜை (கேங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ மற்றும் சிம்லா மாநிலங்களில் விடுமுறை)

நவம்பர் 7 – ஞாயிறுக்கிழமை

நவம்பர் 10 – சத் பூஜை (பாட்னா, ராஞ்சியில் விடுமுறை)

நவம்பர் 11 – சத் பூஜை (பாட்னாவில் விடுமுறை)

நவம்பர் 12 – வாங்கலா திருவிழா (ஷில்லாங்கில் விடுமுறை)

நவம்பர் 13 – இரண்டாவது சனிக்கிழமை

நவம்பர் 14 – ஞாயிறுக்கிழமை

நவம்பர் 19 – குருநானக் ஜெயந்தி/கார்த்திக் பூர்ணிமா (அய்சோல், பெலாபூர், போபால், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் மாநிலங்களில் விடுமுறை)

நவம்பர் 21 – ஞாயிறுக்கிழமை

நவம்பர் 22 – கனகதாசர் ஜெயந்தி (பெங்களூருவில் விடுமுறை)

நவம்பர் 23 – செங் குட்ஸ்னெம் (ஷில்லாங்கில் விடுமுறை)

நவம்பர் 27 – நான்காவது சனிக்கிழமை

நவம்பர் 28 – ஞாயிறுக்கிழமை.

மேற்கண்ட நாட்கள் வங்கிகளுக்கு முழு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கேற்ப முன்கூட்டியே உங்கள் பரிவர்த்தனை தொடர்பான பணிகளை முடித்துக் கொள்ளுங்கள்.

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #வங்கிகள் #வங்கிவிடுமுறை #Bank #BankHoliday #RBI

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button