சினிமா
Trending

புதிய விடியலை நோக்கிய ஜெய் பீம்

புதிய விடியலை நோக்கிய ஜெய் பீம்

சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில்
ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சூர்யா நீதிக்காக போராடும் வழக்கறிஞராக நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இருளர் இன மக்களின் மீது காவல் துறையின் வன்முறை எவ்வாறு இருக்கும் என்பதை இத்திரைப்படம் எடுத்துக் காட்டுகிறது.

ஜெய் பீம் திரைப்படத்தை தா. செ. ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இருளர் இன மக்கள் படும் துன்பத்தையும், அவர்களுக்காக வழக்கறிஞர் சூர்யா எவ்வாறு நீதி பெற்று தருகிறார் என்றும் ஜெய் பீம் திரைப்படத்தில் காணமுடிகிறது.

ராஜாக்கண்ணு என்பவர்
விருத்தாச்சலத்தின் கம்மாபுரத்தில் உள்ள பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். 1993ஆம் ஆண்டு திருட்டு குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிறகு அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவத்தை பிண்ணனியாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஜெய் பீம்.

மூத்த வழக்கறிஞராக எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளார். ஐ.ஜி. பெருமாள்சாமியாக பிரகாஷ் ராஜ், டீச்சர் மித்ராவாக ரஜிஷா விஜயன் ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடித்துள்ள அனைவரும் தங்களின் நடிப்பை மிகக் கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

ராஜகண்ணுவின் மனைவியான செங்கண்ணியாக லிஜோமோல் ஜோஸ், நடித்துள்ளார். தன் கணவர் ராஜாக்கண்ணுவை மீட்டுத் தருமாறு சென்னையில் உள்ள மனித உரிமைகள் ஆர்வலரும் வழக்கறிஞருமான சூர்யாவை சென்று சந்திக்கிறார் லிஜோமோல் ஜோஸ். அவர் தனது கணவரின் இழப்பிற்கு நீதி கிடைக்காமல் விடப்போவதில்லை என்ற நோக்கத்தில் போராடுகிறார். இதன் பிறகு வழக்கறிஞரான சூர்யா எவ்வாறு இந்த வழக்கை கொண்டு செல்கிறார் என்பதும் அவர்களுக்கு எவ்வாறு உதவுகிறார் என்பதும் திரைப்படம் காட்டுகிறது.

ஜெய் பீம் திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. அனைவரின் நடிப்பும் ரசிகர்களை அந்த சம்பவ இடத்திற்கே கூட்டிச் செல்வது போன்று தோன்ற செய்கின்றது. திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ள வசனங்கள் அனைத்தும் பட்டையை கிளப்பியுள்ளது. உணர்ச்சி பொங்க வசனங்கள் அமைந்துள்ளது திரைப்படத்திற்கு மெருகேற்றியுள்ளது.

விமர்சனம் : மகாராணி, தென்காசி.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button