திபெத்தின் தன்னாட்சி பகுதிக்கும் இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்திலுள்ள சர்ச்சைக்குரிய நிலப்பரப்பில் சுமார் 100 க்கும் மேற்பட்ட வீடுகளை கொண்ட அதி நவீனமான ஒரு கிராமத்தையே சீனா கட்டியுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை பென்டகன் தனது ஆண்டு அறிக்கையில் கூறியுள்ளது. பென்டகன் என்பது அமெரிக்காவில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் அறிக்கையாகும்.
இந்தியா மற்றும் சீனாவின் எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. எல்லைப்பகுதியில் உள்ள மக்களுக்காகவே இந்த கிராமம் உருவாக்கப்பட்டது என்று சீன அரசு கூறினாலும் கூட தனது ராணுவத்தை எப்பொழுது வேண்டுமானாலும் இந்த கிராமத்தினை பயன்படுத்தும் வகையிலேயே இந்த கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அத்துமீறல்களுக்கான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் சீனா தனது அத்துமீறல்களை தொடர்ந்து நடத்திக் கொண்டே வருகிறது. இவ்வாறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகள் இந்திய அரசு மற்றும் ஊடகங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையான கட்டுப்பாட்டு கோட்டுக்கு (எல்.ஏ.சி -Line of Actual Control ) அருகே இந்தியாவில் அதிகரித்து உள்கட்டமைப்பு மேம்பாடு மூலம் மோதலை தூண்டியதற்காக இந்தியாவை குற்றம் சாட்ட சீனா முயற்சிப்பதையும் பென்டகன் அறிக்கை குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளது. சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அனைத்தும் இந்தியா கூறும் எந்த ஒரு சலுகைகளையும் மறுக்கும் சீனாவின் நோக்கத்தை வலுக்கட்டாயமாக வலியுறுத்தியுள்ளது.
பி.ஆர்.சி( People’s Republic of China ) அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் மாநில ஊடகங்கள் மூலம் இந்தியா அமெரிக்காவுடனான தனது உறவை ஏற்படுவதை தடுக்க முயன்றனர். இந்த அறிக்கையில் கடந்த 18 மாதங்களில் இந்தியா மற்றும் சீனா எல்லை தகராறு பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதத்தில் சீன மற்றும் இந்தியத் ராணுவத்திற்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் மோதலை தூண்டியது.
லடாக்கில் உள்ள பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்திற்கும் பி.எல்.ஏ( People’s Liberation Army) விற்கும் இடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டது உட்பட இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதத்தில் சி.எம்.சி வெளியிட்ட அறிக்கையில் 4 பி.எல்.ஏ வீரர்கள் கொல்லப்பட்டனர், இருப்பினும் பி.ஆர்.சி யில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை சரியாக தெரியவில்லை.
இந்த சர்ச்சைக்குரிய நிகழ்வின் காரணமாக எதிர்கட்சிகள் மத்திய அரசினை கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை எந்தவித அண்டை நாடுகளின் ஊடுருவலும் இல்லை என்று மக்களைத் தவறான வழியில் வழி நடத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
செய்திகள் : மகாராணி, தென்காசி