தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது குத்தபாஞ்சான் கிராமம்.இங்கு நேற்று மது போதையில் இரண்டு மர்ம நபர்கள் கையில் அரிவாளுடன் வந்து அங்கு இருந்தவர்களை மிரட்டினார்கள்..
இதை கவனித்து கொண்டிருந்த ஒரு பெண் அவரது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
அந்த பெண் வீடியோ எடுப்பதை பார்த்த போதை ஆசாமிகள் அந்த பெண்ணிடம் சண்டையிட்டனர்…
இதை கவனித்து கொண்டிருந்த அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்…
போலீஸ் வருவதை அறிந்த போதை ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடினர்…
அந்த பெண் செல்போனில் பதிவு செய்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து சுப்ரமணியன் என்பவர் கடையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்…
சுப்பிரமணியன் கொடுத்த புகார் (மற்றும்) செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோவின் அடிப்படையில் 4பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து போதை ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறது.
செய்திகள் : பால கௌசல்யா, தென்காசி